பறவைகள் - படத்தொகுப்பு

 பறவைகளை படமெடுப்பது ஒரு அனுபவம். அனுபவிப்பவன் தன்னை பல அடுக்குகளைக் கொண்டவனாக அல்லது பல தளங்களில் செயல்படுபவனாக உணரும்போது அனுபவமும் பல அடுக்குகளை அல்லது தளங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு பறவையை, அதன் ஒரு தருணத்தை என்றென்றும் மாறாதவகையில் பதிவாகச்செய்யும் பொழுது அதை ஒருவகையில் சிறைபிடிப்பது என்ற தளதில் ஒருவன் உணருவானாகில் அப்போது புகைப்படமெடுப்பது ஒரு பறவையை வேட்டையாடுவதற்கு ஒப்பானதாகிறது. அப்போது அது ஒரு வேட்டை அனுபவம். பல வேட்டைக்காரர்கள் புகைப்படக்காரர்களாக மாற்றமடைந்தது தற்செயலானதல்ல.

அதே நேரம் ஒரு பறவையின் ஒரு கணத்தை பொருத்தமான ஒரு ஒளியில், பின்னணியில் அனுபவிப்பவன் அடையும் ஒரு மன எழுச்சியை அல்லது மனம் கடந்த ஒரு கணத்தை சரியாக வெளிப்படுத்தும் வகையில் புகைப்படக் கருவியை பயன்படுத்தினால் அப்போது அது கலையின் வடிவாகிறது. அப்போது அது ஒரு படைப்பனுபவம். எனவே அது ஒரு ஆன்மீக அனுபவமும் கூட. இந்த இரண்டு எல்லைகளுக்கு இடையில் பல வண்ணச்சாயல்கள் (shades) உள்ளன.

இங்கு நான் பல சமயங்களில் எடுத்த புகைப்படங்களில் குறிப்பிடத் தகுந்தவைகள் என்று கருதியவைகளில் சிலவற்றைக் காட்சிப்படுத்தி உள்ளேன். இவைகளிலும் பல சாயல்கள் உள்ளன.

Get the flash player here: http://www.adobe.com/flashplayer

Comments

சோதனை
Vijay said…
ஆகா! மிக மிக அருமையான புகைப்படங்கள். இயற்கையை இரசித்து அவற்றை அழகாக எழுத்தில் கொண்டுவருகிறீர்கள். இன்னமும் நிறைய எழுதுங்கள்.