பெயில்லன் கோழி

பெயில்லன் கோழி ( Baillon's Crake) இமாலயப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தில் இந்தியாவின் தீபகற்ப பகுதிகளில் பயணம் செய்கிறது. திருச்சியில் கூத்தப்பார் பெரியகுளத்தில் சென்ற வருடம் ஒன்றையும் இந்தவருடம் துவாக்குடி குளத்தில் ஒன்றையும் கண்டேன். காடையை விட சற்று பெரிதாக இருக்கும் இது மிகுந்த கூச்ச உணர்வுடன் நீர்த்தாமரை இலைகளுக்குள் பதுங்கியும் மறைந்தும் விடுவதால் புகைப்படம் எடுக்க கடினமாக இருக்கிறது. சாலிம் அலி இரும்புநிற, ஆலிவ் பச்சை கலந்த பின் இறகுகளில் வெள்ளை பெயிண்டை அள்ளித்தெளித்தது போல காணப்படும் என்கிறார். கண்கள் சிவப்பு நிறத்திலும், அலகும் கால்களும் பச்சை நிறத்திலும் காணப்படுகிறது.


No automatic alt text available.

Comments