ஆள்காட்டிகள்


மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
இவைகள் இருக்குமிடத்தை மனிதர்கள் நெருங்கும் போது மற்ற எந்த உயினத்தையும்விட இவை அதை முதலிலேயே கண்டுகொண்டு அம்மனிதர்களைப் பாதுகாப்பான ஒரு முறையில் சுற்றிச்சுற்றி வந்து ‘டிட்-ஹி-டு-இட்’ என்று ஒலிக்குமாறு கத்தியபடியே இருக்கும். இதனால் மற்ற பறவைகள் எச்சரிக்கை அடைகின்றன. இந்த நீண்ட கால்கள் கொண்ட பறவைகள், சிறுபூச்சிகள், புழுக்கள், நீர்வாழ் உயிரினங்களை கண்களால் தேடிக் கண்டு கொண்டு உண்பதால் சிறிய (தோண்டிப்பார்க்கத் தேவையில்லாமல்) அலகையும் பெரிய விழிகளையும் கொண்டுள்ளன. இங்கு காட்டப்பட்டுள்ள எல்லா படங்களிலும் எச்சரிக்கை குறிப்பு மிகத்தெளிவாக துலங்குவதைக் காணலாம்.

Comments

Popular Posts