சுடலைக்குயிலும் செவ்விறகுக் கொண்டைக்குயிலும்
குயில் குடும்பத்தைச் சேர்ந்த சுடலைக்குயில் (Pied Cuckoo or Jacobin cuckoo ) என்ற பறவை ஒன்றை சில வருடங்களுக்கு முன் படமெடுத்துள்ளேன். கோடியக்கரையில் ஒரு பறவையை படமெடுத்தபோது அது சுடலைக்குயிலைப் போலவே தோன்றியதால் அப்படியே எண்ணி அசட்டையாக நான் சில படங்களை எடுத்தேன். அப்பறவை பறந்து விட்டது. பிறகு நான் அப்படங்களால் பெரிதும் கவரப்படாமல் போனேன். இப்போது மறுபடியும் அவைகளைப் பார்க்கையில் சில வித்தியாசங்களைக் கவனித்தேன். பிறகே அந்தப்பறவை செவ்விறகுக் கொண்டைக்குயில் (Chestnut-winged Cuckoo) என்றழைக்கப்படும் குயில் இனப்பறவை என்று உணர்ந்தேன். இத்தனை நாளும் தமிழ்நாட்டிலேயே வசிக்கும் சுடலைக்குயிலாக என்னுடைய கணினியில் இருந்த பறவை ஒரு நொடியில் இமாலயத்தில் கார்வால் தொடங்கி கிழக்கில் வடகிழக்குபிரதேசங்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு வங்காளம் என்று வசித்துக்கொண்டு குளிர்காலத்துக்கு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் பறவையாக மாறிப்போனது. இதற்காகத்தான் ‘அறிந்தவனவற்றில் இருந்து விடுதலை’ வேண்டும் என்கிறார்கள் போல. மரத்தை மறைத்தது மாமத யானை என்றும் சொல்லலாம். பல சமயங்களில் நமது நம்பிக்கை உண்மையை திரையிட்டுவிடுகிறது.
இந்த செவ்விறகுக்கொண்டைக்குயில் மோவாயிலும்,தொண்டையிலும் மேல்மார்பிலும் துருச்சிவப்பு நிறத்தையும் பின்கழுத்தில் ஒரு வெள்ளை அரைப்பட்டியையும் (white half collar on hindneck) கொண்டுள்ளது இதை சுடலைக்குயிலிடமிருந்து தெளிவாக வேறுபடுத்துகிறது. இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைபோன்று செம்பழுப்பு நிறமாகக் காணப்படும்.கருப்புக் கொண்டையுடன் காணப்படும். சுடலைக்குயிலின் இறக்கையின் நடுவில் காணப்படும் ஒரு வெள்ளைப் பட்டையும் வெள்ளை வாலிறகு நுனியும் இவற்றுக்கு இல்லை. ஆனால் சுடலைக்குயிலைப் போன்றே மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டு குஞ்சுவளர்ப்பில் ஒட்டுண்ணியாக (brood parasites) செயல்படுகிறது.
சுடலைக்குயில், Pied Cuckoo |
செவ்விறகுக்கொண்டைக் குயில், Chestnut-winged Cuckoo |

Comments