கூர்பல் வெண்கரடி

அழைக்கும் வனமும்திறந்திருக்கும் கதவுகளும்மனதை வெட்டித் திறக்கமெல்ல வெளியேறுகிறதுகூர்பல் வெண்கரடிவிரிந்திருக்கும் பனிப்பரப்பெங்கும்சிவந்து பரவுகிறது சுடும் குருதி.புரியாது தன் பெரும் உடல் சாய்க்கிறதுமென்மயிர் வெண்கரடிபனியில் உருண்டு தன்குட்டிகள் தொடர சரிந்து இறங்குகிறதுசால்மன் ஒன்றை கவ்வியபடி.ஒரு போதும் நினைத்ததில்லைஒரு பல்கலைக்கழகத்தை, காட்சிப்பொருளைஒரு பனிக்கால உறக்கத்தைவிட ஆண்டுகளாய் நீண்டுகிடக்கிறது இந்தக் கண்ணாடிக்கூண்டு.

Comments

Popular Posts