பாதி உண்மையைப் பற்றிய குறிப்பு
அன்றொரு நாள் நோட்டுப் புத்தகத்தில் எழுதியது.
31/05/2004
இன்று டாமியும் நானும் வாக்கிங் சென்றோம். வானத்தில் மழை மேகங்கள் அலைந்துகொண்டிருந்தன. தெற்கு வானில் தொடர்ந்து கொடி மின்னல்.
நிலவு வடகிழக்குத் திசையில் இருந்தது. பெளர்ணமியை நோக்கிய வளர்பிறை. நல்ல வெளிச்சம். நிலவு அருகில் சாம்பல் நிறத்தில் இருந்தது. வெள்ளை மேகங்கள் இரண்டு.
திடீர் என்று ஒரு உண்மை புலப்பட்டது. நான் நினைத்துக்கொண்டிருந்தேன். பகலில் வானம் நீல நிறத்தில் இருக்கிறது. இரவில் வெளிச்சம் (போதிய வெளிச்சம்) இல்லாததால் அது கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தெரிகிறது என்று. இன்று எனக்குத் தோன்றிய உண்மை, இரவில் வானமே சாம்பல் அல்லது கறுப்பு நிறத்தில் தான் இருக்கிறது.
அப்படித்தான் இந்த இலைகளின் பச்சை நிறமும். நாம் பாதி உண்மையைத்தான் தெரிந்துகொண்டிருக்கிறோம்.
(ஆக்ஸியிடமிருந்து வந்த கடிதம்)

Comments