கஜா புயலுக்கு மறுநாள்
நவம்பர் 16ஆம் நாள் அதிகாலை 3:30 மணி அளவில் கஜா புயல் கரையைக் கடந்தது. காவிரியின் டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதங்களையும், அழிவையும் ஏற்படுத்திவிட்டு இப்புயல் சென்றிருந்தது. தென்னந்தோப்புகளும், வாழைத்தோப்புகளும் மட்டுமல்லாமல் ஏராளமான சிறிய கிராமங்களையும், இப்பகுதியின் மின்சாரக் கட்டமைப்பையும் முழுவதுமாக அழித்துவிட்டது இப்புயல். பல கிராமங்களுக்கு இன்றுகூட மின்சாரம் வரவில்லை; உணவும் குடிநீரும் இல்லை.
திருச்சியில் இப்புயலின் பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவே. திருவெறும்பூரில் புயலின் சீற்றமெதையும் உணரமுடியவில்லை. ஆனால் திருச்சியைச் சூழ்ந்த சிலபகுதிகளில் வாழைத்தோப்புகளுக்கு சேதமுண்டாக்கி உள்ளது இப்புயல்.
புயலுக்கு அடுத்த நாள் 17ஆம் தேதி முற்பகல் திருவெறும்பூர், கூத்தபார்-பெரியகுளத்தில் பறவைகளைக் காண நானும் அதியும் சென்றோம். புயலின் காரணமாக அதிக்கு பள்ளி இல்லை. அப்போது மழை இல்லை; நல்ல வெயில் அடித்துக்கொண்டிருந்தது. வழக்கம் போல கூத்தப்பார் செல்லும் குளத்தின் கரையாக அமைந்த சாலையில் காரில் சிறிது தூரமும் பிறகு நடந்தும் பறவைகளை அவதானித்தோம். இந்த ஆண்டு அக்குளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் பறவைகளை அச்சுறுத்துவதற்காக வைக்கோல் பொம்மைகளை குளத்தின் பல பகுதிகளில் நிறுத்தியிருந்தார்கள். அவைகள் இப்புயலால் சிதைந்திருந்ததாலோ என்னவோ புயலுக்கு முன்னைவிட பல மடங்கு வாத்துகளும், நீர்க்காகங்களும் அன்று அக்குளத்தில் காணப்பட்டன. இந்த ஆண்டு மிக அதிக அளவில் ஆகாயத் தாமரை குளத்தை ஆக்கிரமித்திருந்தது. வாத்துக்களை படமெடுத்ததில், தொலைவில் இருந்தமையால் பதிப்பிக்கத்தக்க அளவிலான தகுதியில் அமைந்த படங்கள் கிடைக்கவில்லை. வழக்கத்துக்கு அதிகமான அளவில் சுடலைக்குயில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக பஞ்சுருட்டான்கள் பூச்சிகளைப் படிப்பதில் முனைந்து காணப்பட்டன. அதேபோல ஆலாக்களும் பறந்து திரிந்தன. மீன்களுக்கு உணவாக சில இடங்களில் சாணக்கரைசல் குளத்தில் கொட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அன்று காணப்பட்ட பறவைகளின் பட்டியல். e-Bird தளத்தில் பதியப்பட்டது.
சீழ்கைச் சிறகி Lesser Whistling-Duck 150
குள்ளத்தாரா Cotton Pygmy-Goose 50
நீலச்சிறகி Garganey 50
ஆண்டி வாத்து Northern Shoveler 100
முக்குளிப்பான் Little Grebe 100
சிறிய தவிட்டுப்புறா Laughing Dove 4
செம்போத்து Greater Coucal 2
பச்சைவாயன் Blue-faced Malkoha 1
சுடலைக் குயில் Pied Cuckoo 8
கோகிலம் Asian Koel 1
நெடுங்கால் உள்ளான் Black-winged Stilt 200
சிவப்பு மூக்கு ஆள்காட்டி Red-wattled Lapwing 1
மீசை ஆலா Whiskered Tern 50
நத்தை குத்தி நாரை Asian Openbill 10
மஞ்சள் மூக்கு நாரை (அ) சங்குவளை நாரை Painted Stork 5
நீர்க்காகம் Cormorant sp. 200
சாம்பல் நாரை Gray Heron 4
செந்நாரை Purple Heron 4
பெரிய கொக்கு Great Egret 20
கொக்கு Intermediate Egret 20
சிறிய கொக்குLittle Egret 50
உண்ணிக்கொக்கு Cattle Egret 100
குருட்டுக் கொக்கு Indian Pond-Heron 20
வெள்ளை அரிவாள் மூக்கன் Black-headed Ibis 100
கறுப்பு அரிவாள் மூக்கன்Red-naped Ibis 10
சிறிய கரும்பருந்து Black-winged Kite 1
செம்பருந்து Brahminy Kite 1
சிரால் மீன்கொத்தி Common Kingfisher 2
வெண்மார்பு மீன்கொத்தி White-throated Kingfisher 1
கறுபு வெள்ளை மீன்கொத்தி Pied Kingfisher 1
பச்சைப் பஞ்சுருட்டான் Green Bee-eater 2
நீலவால் பஞ்சுருட்டான் Blue-tailed Bee-eater 6
பனங்காடை Indian Roller 2
தட்டாரக்குருவி Coppersmith Barbet 10
பொன்முதுகு மரங்கொத்தி Black-rumped Flameback 2
கரிச்சான் Black Drongo 30
வால்காக்கை Rufous Treepie 10
காக்கை House Crow 50
தகைவிலான் swallow sp. 50
செங்குதச் சின்னான் Red-vented Bulbul 10
பிளைத் நாணல் கதிர்க்குருவி Blyth's Reed Warbler 2
கதிர்க்குருவி Plain Prinia 1
சாம்பல் தவிட்டுக்குருவி Large Gray Babbler 20
நாகணவாய் Common Myna 50
தேன்சிட்டு sunbird sp. 1
நீலவால் பஞ்சுருட்டான் |

சுடலைக்குயில் |

பொன் முதுகு மரங்கொத்தி |
பிளைத் நாணல் கதிர்க்குருவி |
Comments