இரண்டுவருடங்களுக்கு முன் சில நாட்கள் கொடைக்கானல் மலைகளில் பயணம் செய்தோம். குடும்பத்தினரோடு சென்றிருந்த விடுமுறைப் பயணம் அது. எனவே விலங்குகளை/ பறவைகளை படமெடுப்பது இரண்டாம் பட்சமாகவே இருந்தது. இருப்பினும் சில நல்ல பறவைப் படங்கள் கிடைத்தன. செம்மீசைக் கொண்டைக்குருவி, கொண்டலாத்தி மற்றும் சில கீச்சான்களைப் படமெடுக்க முடிந்தது. வழியில் இந்தப் பாலூட்டிகளைக் காணநேர்ந்தது. இவைகள் ஒரு பதிவுக்காக எடுக்கப்பட்டன. மலபார் இராட்சத அணில் ஒன்றை வழியில் உள்ள அருவியொன்றின் அருகில் பார்க்கநேர்ந்தது. காட்டெருமைகள் சில சாலையோரம் சென்றுகொண்டிருந்தன. இன்னொரு இடத்தில் குரங்கு ஒன்று தன் இறந்த குட்டியை ஏந்தி நின்றது.
![](//2.bp.blogspot.com/-l9v7ulQDO4I/VnlxN8ZSGsI/AAAAAAAAJic/K_1U5fkiG3g/s640/wild-gour-2013.jpg) |
Comments