Indian Silverbill வெள்ளிச்சில்லை
வெள்ளிச் சில்லை அல்லது இந்திய வெண்தொண்டைச் சில்லை என்றழைக்கப்படும் இந்தப்பறவை தமிழ்நாட்டில் மிகவும் சாதரணமாகக் காணக்கூடிய பற்றியமரும் பறவை வகையைச் சேர்ந்தது. இவை தானியங்களை உண்ணக்கூடியவை.
சில வருடங்களுக்கு முன் திருவெறும்பூரில் வயற்பகுதியில் ஒரு நாட்டுக்கருவேல மரத்தில் நிறைய தூக்கணாங்குருவிகளின் கூடுகள் காணப்படும். அங்கு அக்குருவிகள் கூடுகட்டுவதைப் படமெடுத்துக்கொண்டிருக்கும் போது இந்த சுவரஸ்யமான காட்சியைக் காணவும் படமெடுக்கவும் நேர்ந்தது. வெள்ளிச் சில்லை இணைகள் சில இந்தத் தூக்கணாங்குருவிகளின் கூட்டை வந்து பார்வையிட்டது போலத் தெரிந்தது. அவை பெரும்பாலும் கட்டி முடிக்கப்படாமல், அல்லது கைவிடப்பட்ட கூடுகளைப் போய்ப்பார்த்து நுழைந்து அதை ஆராய்ந்து பார்த்தவண்ணம் இருந்தன. எனக்கு அது வியப்பாக இருந்தது. இப்படி மற்ற பறவைகளின் கூட்டை அதுவும் இப்படி மதிப்பிடும் வகையில் அவை சுற்றி வந்ததைப் படங்கள் எடுத்தேன். பிறகுதான் இந்த வெள்ளிச் சில்லைகள் இப்படியான பழைய தூக்கணாங்குருவிகளின் கூட்டை சில சமயங்களில் தங்கள் கூடாக ஆக்கிக் கொள்வதாகப் படித்தேன்.
Comments