Brood Parasitism


வழக்கமாக வரும் தவிட்டுக்குருவிகள் தோட்டத்துக்கு வந்தன. ஆனால் புதுமையாய் கீச்சொலி கேட்டு அங்கு நோக்கினேன். பறக்கச் சரியாகத் தெரியாத அக்காக் குயில் எனப்படும் குயில் இனக்குஞ்சு அப்படி கத்திக்கொண்டிருந்தது. ஒன்று மாற்றி ஒன்றாக தவிட்டுக்குருவிகள் அதற்கு உணவூட்டிக்கொண்டிருந்தன.


தவிட்டுக் குருவி



இந்த அக்காக்குயில் எனப்படும் Common hawk-cuckoo பறவை brood parasite முறையில் தன் குஞ்சுகளை வளர்ப்பது. அதாவது ஒட்டுண்ணியாய் தன் சொந்த முட்டைகளை வேறொரு இனப்பறவையின் கூட்டில் இட்டு விடும் அப்பறவையும் இதை அறியாமல் தன் குஞ்சென எண்ணி அடைகாத்து, பொறித்து, உணவூட்டி, வளர்த்து ஆளாக்கும்.

தவிட்டுக்குருவிகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் தன் முட்டையினை இட்டிருக்கிறது. தவிட்டுக்குருவிகளும் முட்டையை அடைகாத்து, பொறித்து, இதோ பறக்கக் கற்றுக்கொடுத்து உணவூட்டிக் கொண்டிருக்கின்றன.

Comments