மாங்கனித் திருவிழா




இந்தப்படத்தைப் பார்க்கையில் ‘மாங்கனித் திருவிழா’ என்ற பதச்சேர்க்கையே மனதில் வந்தது. அண்மையில்தான் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடந்ததனால் போல. இந்த மாம்பழம் வீட்டில் மரத்தில் பழுத்து வெளவாலோ ஏதோ பறித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது. நான் எடுத்து ஏதேனும் அணிலோ பறவைகளோ தின்று தீர்க்கட்டும் என்று மரத்தை ஒட்டிய சுவரில் வைத்தேன். மறுநாள் இந்தப் பறவைகள் வந்து தின்று விட்டுப்போயின. கொஞ்சம் தோலை உரித்துச் சாப்பிட்டுப்போனதுதான் விஷேசம். ஒவ்வொன்றாகக் காத்திருந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றன. மறுநாளும் பழம் அங்குதானிருந்தது. ஆனால் அதைப் பறவைகள் சீண்டவில்லை. 

Comments