நீலகிரி ஈப்பிடிப்பான்

இந்த நீலநிற அழகிய ஈப்பிடிப்பான்களை நான் முதன் முதலில் கண்டது மூணாறு பயணத்தின் (2017, மே மாதம்) போதுதான். நாங்கள் மூணாறு வனத்துறையின் கீழ்வரும் ஆனைமுடி சோலை தேசியப்பூங்காவில் ஓரிரவு தங்கினோம். வனத்துறையின் விடுதியிலேயே தங்கினோம். அன்று இரவு நல்ல மழை பெய்தது.  காலையில் நாங்கள் பறவை பார்ப்பதற்காகவும் வன உலாவுக்காகவும் சென்ற போது பல இடங்களில் இப்பறவையைக் காண முடிந்தது.  நீலகிரி மலைப்பகுதிகளில் மட்டுமே இந்த நீலகிரி ஈப்பிடிப்பான் வாழும். சிறிய கண்ணைக் கவரும் இப்பறவையினத்தில் ஆண் அடந்த நீல நிறத்திலும், பெண் சற்றே வெளிறிய நீல நிறத்திலும் இருக்கின்றன. 
நீலகிரி ஈப்பிடிப்பான்- ஆண்
நீலகிரி ஈப்பிடிப்பான்- பெண்

Comments

அருமை