அன்றில்
வெள்ளை அரிவாள் மூக்கன் தமிழகத்தைச் சேர்ந்த பறவைகளில் ஒன்று. அறிவாள் மூக்கன்களில் (Ibis) இரண்டு வகைகள் இருக்கின்றன. அவை வெள்ளை அரிவாள் மூக்கன், கறுப்பு அரிவாள் மூக்கன் அல்லது சிறிய அரிவாள் மூக்கன். இது சங்கப்பாடல்களில் அன்றில் என்று அழைக்கப்படுகிறது. மீன்கள், தவளைகள் மற்றும் பிற நீர்வாழ் பூச்சிகளை உணவாகக்கொள்கிறது.
மொத்தம் 17 இடங்களில் அன்றில் பறவையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இருப்பதாக சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்பவரும் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமான திருமதி வைதேகி குறிப்பிடுகிறார்.
திருச்சியில் காவிரியிலும், கல்லணைப்பகுதியிலும், கூத்தபார் பெரிய குளத்திலும், கிளியூர்க்குளத்தைச் சுற்றிய வயல்வெளிகளிலும் இவற்றைக் காணலாம்.
நெருப்பினன்ன செந்தலை அன்றில் |
வெள்ளை அரிவாள் மூக்கன் |
சிறிய அன்றில் |
பழைய பதிவுகள்:
Comments