சிவப்பு மூக்கு ஆள்காட்டி
இதன் உடல் வெண்கலப் பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும். கண்களுக்கு மேல் கொம்பு போல சிவந்த தசை முனைகள் நீண்டிருக்கும். கண்ணுக்கு பின்னிருந்து தொடங்கும் வெண்ணிறப்பட்டை கீழ்நோக்கிச் சென்று வயிற்றின் வெண்மையோடு இணையும். தமிழகம் எங்கும் நீர்வளம் மிக்க நஞ்சை நிலங்களில் பரவலாகக் காணப்படும். புல் வளந்துள்ள ஆறு, ஏரி, குட்டைகளின் கரைகளில் வண்டு, நத்தை, எறும்பு முதலியவற்றை இரையாகக் கொள்ளும். வேட்டைக்காரர்கள் நீர் நிலையை நெருங்கும் போது உரக்கக் கத்தியபடி வட்டமிட்டுப் பறந்து பிற பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எச்சரிக்கை செய்வதால் ஆள்காட்டி என அழைக்கப்படுகிறது.
இந்த ஆள்காட்டி வல்லம் மாகாளியம்மன் கோவிலின் அருகில் உள்ள நீர்நிலைக்கருகில் காணப்பட்டது. தகவல்: தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர். க.ரெத்னம் |
Comments