பட்டாணி உப்புக்கொத்தி

இதை துவாக்குடியில் உள்ள ஒரு ஏரியில் படமெடுத்தேன். இதை பல இடங்களில் பலமுறை படம்பிடித்துள்ளேன் என்றாலும், இந்த உப்புக்கொத்தி கொஞ்சமே கொஞ்சம் பக்கத்தில் வருமளவுக்கு அனுமதித்தது. இல்லாவிட்டால் குடுகுடு வென்று சின்னக்கால்களால் ஓடித்திரும்பி ஓடித்திரும்பி நம்மிடமிருந்து விலகிவிடும். இல்லாவிட்டால் அவ்வப்போது கைகள் இரண்டையும் குழந்தைகள் சட்டென காதுகளை ஒட்டினாற் போல தூக்கி இறக்குவது போல சின்ன இறக்கைகளை உயர்த்தி இறக்கிப் பின் தரையை ஒட்டியாவாறே பறந்துவிடும். மூக்கும் வாலுமாய் ஒரு அரையடி இருக்கும்.

இந்தியத் துணைக்கண்டம் முழுக்கக் காணப்படும் இது சின்னக்கோட்டான் என்று தமிழில் அழைக்கப்படுவதாக சலீம் அலி குறிப்பிடுகிறார். ஓட்டமாய் ஒரு நடை. பின் சட்டென நின்று இரையைப் பொருக்குதல், பின் மறுபடியும் ஒரு சிறு ஓட்டம். இப்படியே போகும். நடு நடுவில் இறக்கைகள் இரண்டையும் தூக்கி இறக்கி ஒரு செவ்வணக்கம். மறுபடி ஒரு குறு ஓட்டம்.இப்படி ஓடும்போதுதான் இருப்பதே தெரியும். இரையாக சின்னப்பூச்சிகள், சின்ன நண்டுகள் இப்படிச் சாப்பிடுகிறது. இப்படி மனிதப்பூச்சிகளை ஏதாவது ஒரு உப்புக்கொத்தி தின்றுவிடாதா என்றுதான் இருக்கிறது நாட்டு நடப்பைப் பார்க்கையில்.



Comments

உங்கள் பறவைக் கட்டுரைகளைப் படிக்கும்போது இயற்கையியளாளர் கு. கிருஷ்ணனின் கட்டுரைகள் ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. நன்றி

Popular Posts