செம்மார்புக் குக்குறுவான்




இப்பறவை கனத்த அலகுடனும், இலைப் பச்சை நிறத்துடனும், மார்பும் முன்தலைப் பகுதியும் சிவந்த நிறத்துடன், மஞ்சள் கழுத்துடன், குட்டையான வாலுடன் இருக்கும்.   ஆணும் பெண்ணும் ஒன்று போல தோன்றும். இதன் குரல் ஒரு உலோகத்தில்  சீரான இடைவெளியில் சம்மட்டி அடிப்பது போல அழகாகக்  ஒலிப்பதால் தட்டாரக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது. தான் வாழும் பகுதிக்கு தீங்கு நேர்ந்தாலோ, அன்னியர் வந்தாலோ விநோத குரல் எழுப்புவதால் பளியர்கள் இதை திட்டுவான் குருவி என்றழைக்கிறார்களாம். மரப்பொந்துகளில் தனது  கூட்டை அமைத்துக்கொள்கிறது. இப்பறவை ஆல், அரசு, அத்தி மரப் பழங்களை விரும்பி உண்ணும். விதை பரவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயம் ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்ணும். இந்தப்படம் மும்பைக்கு அருகில் ஒரு மாந்தோப்பில் எடுக்கப்பட்டது. திருச்சியில் கல்லணைக்கு அருகிலும் இதைக் கண்டுள்ளேன்.

Megalaima haemacephala, Crimson-breasted Barbet, கன்னான் குருவி


Comments

எங்கள் வீட்டு மூட்டைமாடியிலுள்ள மூங்க்கில் களையில் இது வாழ்கிறது.

Popular Posts