மீசக்கார நண்பா உனக்கு கோவம் அதிகம்டா!

                                        செம்மீசைக் கொண்டைக்குருவி
செங்குதக் கொண்டைக்குருவி








































































இந்த செங்குதக் கொண்டைக்குருவி என்கிற சின்னான்களை  எப்போதும் எங்கள் தோட்டத்தில் காணலாம். அவைகள் சுண்டைக்காய்ச் செடியில் இருந்து பிஞ்சுக் காய்களை உண்ண வரும். அல்லது தங்கள் வாலை உயர்த்தி செக்கர் நிறக் குதத்தினை நீர்த்தட்டில் நனைத்து குளிக்க வரும். இல்லை  இணையாக வந்து நீரருந்தும். இவற்றின் கொண்டை அவ்வளவு எடுப்பானதல்ல என்றாலும் கொஞ்சம் கவனித்தால் கொண்டையைக் கண்டுகொள்ள முடியும். இவற்றின் கறுத்த அலகும் எண்ணைக் கறுப்பு நிற ஒளிரும் கண்களும், செதிள்கள் போன்று தோன்றும் மார்பும் காட்சிக்கு இனியவை. 

இம்முறை கொடைக்கானலுக்குப் போனபோது இன்னொரு வகை கொண்டைக்குருவியைக் கண்டேன். இது செந்நிற வாலடியோடு செம்மீசையையும் கொண்டிருந்தது. இரு புறங்களிலும் தீற்றியது போல இருந்த மீசை தனிக் கவர்ச்சியைக் கொடுத்தது என்றுதான் சொல்லமுடியும். இன்னொரு அழகான அம்சமும் இக்கொண்டைக்குருவிக்கு இருந்தது. அதன் கருங்கொண்டை கொம்பு போல நீண்டு வளைந்து காணப்பட்டது. அதோடு அதன் மார்பிலும் செதிள்கள் போன்ற சிறகுகளைக் காணமுடியவில்லை. 

ஒரே போன்று தோற்மளிக்கும் அலகுகள் அவற்றின் உணவுகள் மலையில் இருந்தாலும், சமவெளியில் இருந்தாலும் ஏறக்குறைய ஒரே தன்மையன என்பதைச் சொல்லின.  இரண்டும் புதர்களிடையே தாவிப்பறந்து பறக்கும் பூச்சிகளையும், சிறு பழங்களையும், உணவாக்கிக் கொள்கின்றன. ஆனால் இந்தக்கொம்பின் பயன்தான் என்ன?

மீசக்கார நண்பா உனக்கு கோவம் அதிகம்டா!

செங்குதக்கொண்டைக் குருவி- Red-vented Bulbul- Pycnonotus cafer
செம்மீசைக் கொண்டைக் குருவி- Red-Whisered Bulbul-Pycnonotus jocosus







Comments

Popular Posts