கூகை


IMG_9344c
வட்டவடிவமான இதன் முகத்தினைச் சுற்றி விறைத்து நிற்கும் பலவகை நிறங்கள் கொண்ட தூவிகள் இருக்கும். மார்பும் வயிறும் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளோடு பட்டு நிறத்தை ஒத்த வெண்மை கொண்டதாக இருக்கும். பகலில் பதுங்கி இருந்து இரவில் வெளிப்படும். கதிரவனின் ஒளியைத் தாங்கும் ஆற்றல் இதன் கண்களுக்கு இல்லாததால் காக்கை முதலிய பறவைகள் தாக்கும் போது தன்னைக் காத்துக்கொள்ள இயலாததாக உள்ளது. எலி சுண்டெலிகளை உணவாகக்கொள்வதால் உழவர்களின் தோழன் என்று அறியப்படுகிறது.
கூகை ஆந்தை, Barn Owl (Tyto alba) தமிழ்நாட்டுப் பறவைகள்- முனைவர் க.ரத்னம். மெய்யப்பன் தமிழாய்வகம்.

Comments

Popular Posts