மே நினைவுகள்

IMG_8732-inw  கார்த்திகைப் பூ

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?



காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும்.
என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும்.
ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப்
பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன்,
ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி,
ஒருசிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால்
அதை ஏற்றுக் கொள்வானோ?
                                                  முனைவர் பிரபாகரன் உரை


Let the  mornings and evenings cease!
there’s no purpose for my existence!
Peacock feathers adorn his memorial stone,
and filtered toddy is poured from small vessels.
Will he accept them?
He who would not accept an entire country
with roaring mountains and  lofty peaks? 

                            English Translation by Vaidhehi


அதியன் நெடுமான் அஞ்சியின் நினைவு நாள் குறித்து ஔவை எழுதிய புறநானுற்று பாடல். 

Comments

Popular Posts